திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் ஆதி குரு முதல்வர் ஶ்ரீ குரு ஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.நானிலம் போற்றும் நட்சத்திர குரு மணிகள் - குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாட்சியின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் காற்றாடித்தட்டு தர்மபுரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ குருஞான சம்மந்தர் மிஷன் கார்டன் கோர்ட் கேம்பிரிட்ஜ் (சி.பி.எஸ்.ஈ) பள்ளி சார்பாக நாகர்கோவில் நகரின் அடையாளமாக விளங்கும் நாகராஜா கோவிலின் அருகே ஶ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் , குரு மகா சன்னிதானம் அவர்களின் திருவுள பாங்கின் வண்ணம் இன்று வழங்கப்பட்டது.